
பஞ்சபட்சிகள்
பஞ்ச என்றால் ஐந்தினைக் குறிக்கும். பட்சிகள் என்றால் பறவைகள். வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் என ஐந்து வகையான பறவைகளைக் கொண்டு இந்த சாஸ்திரம் கணிக்கப்படுகிறது. 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் என அனைத்தும் இந்த பஞ்ச பட்சிகளுக்குள் அடக்கம் என்று கூறுகிறார்கள்.
பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.[1] இதனை சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறியதாக நம்பிக்கை.[1] இந்தக் கலையை அறிந்தோர் எதிரிகளை வெல்வர் என்பது நம்பிக்கையாகும். இதனால் கத்திக்கட்டு சேவல் சண்டை, கிடா சண்டை, சிலம்பம் போன்ற விளையாட்டுகளினை விளையாடுவதற்கு காலம் மற்றும் வெற்றி வாய்ப்பினை கணிக்க இந்த பட்ச பட்சி சாஸ்திரத்தினை கற்கின்றனர். பஞ்ச பட்சி சாத்திரத்தினைக் கொண்டு ஐந்து பறவைகளின் குணநலன்களை மனிதனோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உள்ளது. இம்முறையில் ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது. பஞ்ச பட்சிகள் எனக் கூறப்படும் பறவைகளாவன, வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்பனவாகும்.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தினை சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினார். பார்வதி தேவி சூர சம்ஹாரத்தினை நிகழ்த்துவதற்காக முருகனிடமும், முருகப் பெருமான் அகத்தியர் போன்ற சித்தர்களுக்கும் இக்கலையை எடுத்துரைத்தனர்.[1]
சித்தர்கள் தங்களின் சீடர்களுக்கு கற்பித்தனர். இவ்வாறாக குரு வழியிலேயே பஞ்ச பட்சி சாஸ்திரம் கூறப்பட்டு வந்துள்ளது
ஒருவர் பஞ்சபட்சி சாஸ்திரத்தில் திறமை உடையவராக இருக்கும் பட்சத்தில் அவர் ஜோதிடத்தின் உதவிகளின்றி சுப தினங்கள் மற்றும் சுப நேரங்கள் போன்றவைகளை சரியான முறையில் அவர்களால் குறித்துக் கொடுக்க இயலும். ‘பட்சி அறிந்தவனை பகைத்துக் கொள்ளாதே” என்பது நமது முதுமக்களின் பழமொழியாகும். ஏனெனில் பஞ்சபட்சி சாஸ்திரத்தை அறிந்த ஒருவரை நாம் பகைத்துக் கொண்டால் அவர்கள் எதிரிகளான நம்மை எவ்விதத்தில் வெல்வார்கள் என்று நம்மால் எள்ளளவும் கணிக்க இயலாத ஒரு செயலாகும்.
ஒருவேளை நம்மீது பகை கொண்ட எதிரிகள் மறைமுகமான எதிர்ப்புகளை நம்மீது பயன்படுத்தும்பொழுது, பஞ்சபட்சி சாஸ்திரம் அறிந்திருந்து அதை நடைமுறையில் பயன்படுத்தி வெற்றி கண்டவராக இருக்கும் பட்சத்தில் அந்த மறைமுக எதிர்ப்புகளையும் நாம் எளிமையான முறையில் வெற்றி கொள்ள இயலும்.

பஞ்சபட்சி சாஸ்திரம்
‘பஞ்ச” என்றால் ‘ஐந்து” என்று பொருள். ‘பட்சி” என்றால் ‘பறவை” என்று பொருள். ‘சாஸ்திரம்” என்றால் ‘எழுதப்பட்டவைகளை செயல்படுத்தி பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள். பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது மனிதனின் குணநலன்களை ஐந்து பறவைகளின் குணநலன்களோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உடையது. 27 நட்சத்திரங்களும் ஐந்து பறவைகளுக்குள் அடக்கப்படுகின்றது. இம்முறையில் ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது. பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது குருவழியாக சீடர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கூறப்பட்டது ஆகும். பஞ்சபட்சி சாஸ்திர குறியீடு ஐந்து பறவைகளை வைத்து உருவாக்கப்பட்டது. அவை.,
பஞ்சபட்சி பார்க்கும் முறை
நீங்கள் வளர்பிறையில் அதாவது, அமாவாசை தொடங்கி, பௌர்ணமியில் பிறந்தவரா? அப்படியென்றால் உங்களது பட்சி எது என்று பார்க்கும் முறை இதோ.

வல்லூறு பட்சி அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வல்லூறு பட்சிக்கு சொந்தக்காரர்கள். நட்சத்திரம் தெரியவில்லை எனில் அ, ஆ, ஒள முதல் எழுத்தாய் கொண்டவர்களுக்கு வல்லூறுதான் பட்சியாகும்.

ஆந்தை பட்சி – திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆயில்யம், மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆந்தை பட்சிக்கு சொந்தக்காரர்கள். நட்சத்திரம் தெரியவில்லை எனில் இ, ஈ முதல் எழுத்தாய் உள்ளவர்கள் ஆந்தை பட்சிக்காரர்கள்தான்

காகம் பட்சி – உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரக்காரர்கள் காகப்பட்சியினைக் கொண்டவர்கள். நட்சத்திரம் தெரியவில்லை எனில் பெயரில் முதல் எழுத்து உ, ஊ அமைந்தவர்களும் காகப்பட்சிக்காரர்களே.

கோழிப்பட்சி – அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் (தனுசு) நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோழிப்பட்சிக்காரர்கள். நட்சத்திரம் தெரியவில்லை எனில் பெயரின் முதல் எழுத்தாய் எ, ஏ கொண்டவர்கள் கோழிப்பட்சிக்குரியவர்கள்.

மயில் பட்சி – திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மயில் பட்சியின் ஆட்சி உள்ளவர்கள். நட்சத்திரம் தெரியவில்லை எனில் பெயரின் முதல் எழுத்தாய் ஒ, ஓ கொண்டவர்கள் மயில் பட்சிக்குரியவர்களே.
நீங்கள் தேய்பிறையில் அதாவது, பௌர்ணமியின் அடுத்த நாளிலிருந்து அமாவாசைக்கு முதல் நாள் பிறந்தவரா? அப்படியென்றால் உங்களது பட்சி எது? என்று பார்க்கும் முறை இதோ...
வல்லூறு பட்சி – திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வல்லூறு பட்சிக்கு சொந்தக்காரர்கள்.
ஆந்தை பட்சி – அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆந்தை பட்சியைக் கொண்டவர்கள்.
காகம் பட்சி – உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காகம் பட்சிக்காரர்கள்.
கோழிப்பட்சி – திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோழிப்பட்சியைக் கொண்டவர்கள்.
மயில் பட்சி – அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மயில் பட்சியின் ஆட்சி உள்ளவர்கள்.
பஞ்சபட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் என்னென்ன காரியங்கள் செய்யலாம்?
நோய்களை நீக்குவதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுதல், மனதில் எண்ணிய ஆசைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல், எதிர்ப்புகளை தகர்த்தெரிவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல், கிரகதோஷங்களுக்கான பரிகாரங்களை செய்தல், சுபக்காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல், போட்டிகளில் வெற்றியடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல், ஆருட முறையில் பலன் கூறுதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.
.
ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்.
அரசு – 100% பலம்
ஊண் – 80% “
நடை – 50% “
துயில் – 25% “
சாவு – 0% “
ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.
ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.
இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் – Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Riskஆன ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.
வளர்பிறை - படுபட்சி நாட்கள்
வல்லூறு – வியாழன், சனி
ஆந்தை – ஞாயிறு, வெள்ளி
காகம் – திங்கள்
கோழி – செவ்வாய்
மயில் – புதன்
தேய்பிறை படுபட்சி நாட்கள்
வல்லூறு -செவ்வாய்
ஆந்தை -திங்கள்
காகம் -ஞாயிறு
கோழி -வியாழன், சனி
மயில் -புதன், வெள்ளி
அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-
வளர்பிறை
பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு – ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை – புதன், திங்கள்
காகம் – வியாழன்
கோழி – வெள்ளி
கோழி – வெள்ளி
மயில் – சனி
இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு – வெள்ளி
ஆந்தை -ஞாயிறு
காகம் -ஞாயிறு, செவ்வாய்
கோழி – திங்கள், புதன்
மயில் -வியாழன்
தேய்பிறை
பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு -வெள்ளி
ஆந்தை – வியாழன்
காகம் -புதன்
கோழி – ஞாயிறு, செவ்வாய்
மயில் – திங், சனி
இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு -ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை – புதன்
காகம் – வியாழன்
கோழி – திங்கள், சனி
மயில் -வெள்ளி
இந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.
அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:
1) காகம்
2) ஆந்தை
3) வல்லூறு
4) கோழி
5) மயில்
இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.
அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள், அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.
தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள், அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.
படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.
நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.
பறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.
உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும்.
அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். (நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்).ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.
நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.
“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.
உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.
அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.
உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.
பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ,இ,உ,எ,ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அ – வல்லூறு
இ – ஆந்தை
உ – காகம்
எ – கோழி
ஒ – மயில்.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.
1) உடலிலிருந்து நோய் நீக்குதல்
2) பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்
3) மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்
4) பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
5) எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்
6) பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்
7) போட்டிகளில் வெற்றியடைதல்
8) எதிரிகளை வெல்லுதல்
9) தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்
10) ஆருட பலன் கூறுதல்
11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்
12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்
13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்பஞ்ச பட்சி என்பது அந்தந்த பட்சிக்கு ஏற்ற காலத்தில் தொழில் செய்தால் அது சிறப்பாக முடியும் . இதை மனதில் வைத்து தான் இக்கலை கற்றுத்தர மறுக்கப்பட்டது. இதன் முன்பு எதுவும் செல்லாது அந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது.
ராமாயணத்திலும்,கந்தபுராணத்திலும் போரில் இன்று போய் நாளை வா என்பார்கள். கதை படி அது பெருந்தன்மையாக இருக்கலாம் ஆனால் அந்த ஜாமம் முடிந்தவுடன் பகைவரின் பட்சி அரசாலும் என்பதை முருகபிரானும்,ராமபிரானும் அறிந்திருந்தனர் . அதனால் தான் நாளை வா என்றனர். பட்சி சாஸ்திரம் அவ்வளவு பயங்கரமானது.
பொதுவாக பட்சியில் எழுத்துபட்சி,ராசிபட்சி,நட்சத்திர பட்சி ,மறைவு பட்சி,சூக்கும பட்சி என பிரிவுகள் உண்டு.
திருவள்ளுவர்
இதன் விளக்கம் ஏற்ற காலத்தை அறிந்து,இடத்தோடு பொருந்தச் செய்வானாயின், அவன் உலகம் முழுவதையும் தானே ஆள கருதுவானால் அது முடியும்