Reg.No -BK IV/19/2022

தியானாலயா யோகா சிகிச்சை அறக்கட்டளை. இன்ஸ்டியூட் ஆப் ஸ்ரீ பதஞ்சலி அஷ்டாங்க யோகம். குருகுல வாழ்வியல் கல்வி முறை - மதுராந்தகம். 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் - பெண் இருபாலருக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது . முன்பதிவுக்கு உடனே முந்துங்கள்.

வாஸ்து சாஸ்திரம் என்பது என்ன...? இதில் வாஸ்து புருஷனுக்கு உள்ள தொடர்பு என்ன...?

வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். “வாஸ்து” என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். வாஸ்து சாஸ்திரம் என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும்,இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.

கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும்.

வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்கு பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை. இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது.

இம்மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன. முக்கியமான எட்டுத் திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்டதிக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குப் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள்.

வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள். இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது.

ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப்படுத்துகின்றது. இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும் போது, வடகிழக்கில் தலையும், தென்மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப்படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகின்றான். வாஸ்து புருஷ மண்டலமும், வாஸ்து புருஷனும்

 


கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்கவேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்குப் பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை இதனால் இப்பகுதி பிரமஸ்தானம் எனப்படுகிறது. இம் மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன.

படிமம்-2 திக்குகளின் அதிபதிகள்

முக்கியமான எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்ட திக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குக் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள். வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள்.

படிமம்-3 வாஸ்து புருஷ மண்டலமும் வாஸ்து புருஷனும்

இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப் படுத்துகின்றது. இந்த உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும்போது, வடகிழக்கில் தலையும், தென் மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப் படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விபரிக்கப்படுகிறான்.

வாஸ்து புருஷன் பற்றிய எண்ணக்கரு வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியமான ஒரு அம்சமாகும். இந்துக்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் கட்டிடத்துக்குரிய நிலம் அல்லது மனை ஒரு சடப் பொருளாக அன்றி உயிர்ப்புச் சக்தி கொண்ட ஒன்றாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு ஒரு கட்டிட நிலத்தின் உயிர்ப்புச் சக்தியே வாஸ்து புருஷனாக குறியீடாக உருவகப் படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இக்குறியீடு வாஸ்து புருஷனை ஆண் பால், மனித உருவம் கொண்டவனாகச் சித்தரிக்கின்றது. வாஸ்து புருஷ மண்டலத்தில் முழு இடத்தையும் பிடித்துக்கொண்டு, வடகிழக்கில் தலையையும், தென்மேற்கில் காலையும் வைத்துக்கொண்டு வாஸ்து புருஷன் குப்புறக் கிடப்பதாகச் சொல்லப்படுகின்றது

தோற்றம்

படிமம்-1 வாஸ்துவும் வாஸ்து புருஷ மண்டலமும்

வாஸ்து புருஷனுடைய தோற்றம் பற்றிக் கூறும் பழங்கதை ஒன்று வாஸ்து நூல்களிலே காணப்படுகின்றது. இதன்படி, பூமியையும், வான் வெளியும் தன்னுடைய உடம்பினால் வியாபித்துக்கொண்டு பூதமொன்று உருவானது. இதனைக் கண்ட பிரம்மா முதலிய தேவர்கள் பயந்து, எல்லோரும் கூடி அப் பூதத்தை முகம் குப்புறப் படுத்த நிலையில் அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். இவ்வாறு செய்யும்போது எந்தெந்தத் தேவர்கள் அப் பூதத்தின் எப் பகுதியைப் பிடித்துக் கொண்டார்களோ அவர்களே உடலின் அப்பகுதிக்கு அதிபதிகளாகக் கருதப்படுகிறார்கள். இக்கதை, வாஸ்து புருஷ மண்டலத்தில் பல்வேறு கட்டங்கள் 45 தேவர்களுக்கு அதிபதித் தானங்களாகக் கருதப்படுவதற்கான காரணத் தொடர்பையும் விளக்குகிறது.

 

கட்டிட மனையும், வாஸ்து புருஷனும்

கட்டிட நிலம் அல்லது மனைக்கும், வாஸ்து புருஷனுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கூறும் சிற்பநூல்கள், ஒவ்வொரு மாதத்திலும் வெவ்வேறு திசைகளில் தலையை வைத்துக்கொண்டு, இடது கை மேலாகவும், வலது கை கீழேயும் இருக்கப் படுத்து இருப்பதாக உருவகப்படுத்துகின்றன.

 

இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டும் பொழுது வாஸ்து பார்த்து அந்த வாஸ்து நேரத்தில் கட்டிடப் பணிகளைத் தொடங்குகின்றனர்.

வாஸ்து புருசன்

வாஸ்து புருசன் இடது கையைக் கீழேயும், வலது கையை மேலாகவும் வைத்துப் படுத்திருப்பார். ஒவ்வொரு மாதமும் விழிப்பது இல்லை. குறிப்பிட்ட எட்டு மாதங்களில் விழித்திருப்பார். அந்த நாட்களிலும் 3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) விழித்திருப்பார். அதில் 2 1/4 நாழிகைக்கு மேல் 3 3/4 நாழிகையில்தான் (36 நிமிடம்) வாஸ்து செய்வது சிறந்தது என்கிறார்கள்.

வாஸ்து புருசன் பணிகள்

வாஸ்து புருசன் விழித்திருக்கும் நேரங்களில் அவர் செய்யக்கூடிய பணிகள்
பல் துலக்குகிறார்.
நீராடுகிறார்
பூஜை செய்கிறார்
உணவு உண்கிறார்
தாம்பூலம் தரிக்கிறார்.
இதில் கடைசி 36 நிமிடங்களில் வாஸ்து செய்தால் வீடு சிறப்புடன் நிலைத்து நிற்கும்
வாஸ்து நேரம்
வாஸ்து வருடத்தில் எட்டு மாதங்களில் கீழ்காணும் அட்டவணைப்படி உள்ள நாள், நேரத்தில் வாஸ்து புருசன் விழித்திருக்கும் நேரம் வாஸ்து நேரம் எனப்படுகிறது.

வ,எண் மாதம் நாள் நேரம்

1 .சித்திரை 10 காலை மணி 8.54 முதல் 9.30 வரை
2.வைகாசி 21 காலை மணி 10.06 முதல் 10.42 வரை
3.ஆடி 11 காலை மணி 7.42 முதல் 8.18 வரை
4.ஆவணி 6 பகல் மணி 3.18 முதல் 3.54 வரை
5.ஐப்பசி 11 காலை மணி 7.42 முதல் 8.18 வரை
6.கார்த்திகை 8 காலை மணி 10.54 முதல் 11.30 வரை
7.தை 12 காலை மணி 10.06 முதல் 10.42 வரை
8.மாசி 22 காலை மணி 10.06 முதல் 10.42 வரை .

இன்றைய காலத்தில் நிறைய மனைகள் விற்பனைக்கு வருகிறது சிலர் அதை பெற்று வீடு எழுப்புகிறார்கள் சிலர் அதை சில காலம் கழித்து விற்பனை செய்கிறார்கள், சிலர் விற்பனை செய்ய முடியாமலும் சிலர் வீடு எழுப்ப முடியாமலும் அரைகுறையாக விட்டு விடுகின்றனர்.
மனையை வாங்கும் பொழுது நன்றாக கவனித்து வாங்காமல் நம்முடைய பொருளையும், பணத்தையும் இழந்து நாம் சிரமப்பட கூடாது என்று சில தகவல்களை நூல்களில் பதித்து உள்ளார்கள் முன்னோர்கள்.

முதலில் அடிப்படை தகவல் தெரிந்து கொள்ள வேண்டும். மத்ஸ்ய புராணம் வாஸ்துவை பற்றி விவரிக்கிறது, வாஸ்து என்பது ஒரு ஆண் தெய்வத்தின் பெயர் ஆகும்.

சிவபெருமான் அந்தகாசுரனுடன் போர் புரிந்து வெற்றி அடைந்தார். அப்போது சிவனின் நெற்றியில் உள்ள வியர்வைகள் ஒன்று சேர்ந்து பூமியில் விழுந்தன. அதில் இருந்து ஒரு பூதம் பயங்கர தோற்றத்துடன் வெளி வந்தது. அந்த பூதத்துக்கு மிகவும் பசியாக இருந்ததால் அங்கே போரில் கீழே விழுந்த அனைத்தையும் உண்டது. அப்போதும் அந்த பூதத்துக்கு பசி தீரவில்லை. அதனால், அந்த பூதம் சிவனை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தது.

தவத்தை மெச்சிய சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்றார் வழக்கம்போல். அதற்கு இந்த பூமி முழுவதையும் நான் எனது கண்காணிப்பின் வைத்து இருக்கவேண்டும் என்று கேட்டது. அழிக்கும் சக்தியும் எனக்கு வேண்டும் என்று கேட்டு பெற்றது.

இதை கவனித்த பிரம்மா மற்றும் தேவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பூதத்தை குப்புற தள்ளிவிட்டனர். குப்புற விழுந்தவுடன், அனைவரும் அந்த பூதத்தின் மேலே உட்கார்ந்துகொண்டு அதை எழுந்திருக்கவிடாமல் செய்தனர். அந்த பூதம் எனக்கு பசிக்கிறது என்றது. அதற்க்கு பிரம்மா சொன்னார். பூமியில் பிராமணர்கள் செய்யும் வைவஸ்வத ஹோமத்தில் கொடுக்கும் பொருட்களை நீ உண்டுகொள். மேலும், பூமியில் வீடு கட்டுபவர்கள், உனக்கு ஹோமம் செய்வார்கள், வாஸ்து பூஜை செய்வார்கள். அதை நீ சாப்பிட்டுக்கொள் என்றனர்.

பிரம்மாவும் மற்றவர்களும் அவனுக்கு வாஸ்து புருஷன் என பெயரிட்டனர். இதை போல மனிதனின் கால் அடியை வைத்து தான் அன்று மனை கணிதம் சொல்ல பட்டது.

வாஸ்து என்னும் அறிவியல்

பூமியானது ஒரு குறிப்பிட்ட சாய்மான கோணத்தில் (சாய்மான அச்சில்) தன்னைத்தானே சுழன்றுகொண்டு இருக்கின்றது. அதனால் ஏற்படும் சுழற்சிவிசையினால் வான்மண்டல ஆக்க சக்தி ஒரு குறிப்பிட்ட சாய்மான கோணத்தில் உறுஞ்சப்பட்டு பூமியின் மற்ற பகுதிகளை சென்று அடைகின்றது

பூமியானது ஒரு குறிப்பிட்ட சாய்மான கோணத்தில் (சாய்மான அச்சில்) தன்னைத்தானே சுழன்றுகொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றுது. அதனால் உத்ராயணகாலத்தில் (கோடைகாலத்தில்) சூரியனின் ஒளியானது பூமியின் மீது சற்று வடக்குப்பக்கமாக பயணம் செய்கின்றது. அதுவே தஷ்ணாயணகாலத்தில் (குளிர்காலத்தில்) சூரியனின் ஒளியானது பூமியின் மீது தெற்குப்பக்கமாக பயணம் செய்கின்றது.
பூமியானது தன்னைத்தானே சுழல்வதன் காரணமாக ஆக்க சக்தி நிறைந்த கற்று பூமியை எதிர் திசையில் கடந்து செல்கின்றது.
பூமியானது ஒரு மிகப்பெரிய காந்தமாக செயல்படுகின்றது. மற்றும் அது வட துருவம், தென் துருவம் என இருதுருவங்களை கொண்டுள்ளது. மேலும் வட துருவம் நேர் ஆற்றலாகவும், தென் துருவம் எதிர் ஆற்றலாகவும் செயல்படுகின்றது.

சூரியனின் ஒளியானது பூமியின் மீது குறிப்பிட்ட சிலப்பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் ஆக்க சக்தியினை வெளிப்படுத்துகின்றது (உச்சப்பகுதி). மற்றும் பிறபகுதிகளில் தீய சக்தியினை வெளிப்படுத்துகின்றது (நீச்சபகுதி).

உயிர் சக்தி (அண்ட சக்தி / காஸ்மிக் ஆற்றல்)
சூரிய சக்தி (ஒளியின் ஆற்றல் / வெப்பத்தின் ஆற்றல்)
காந்த சக்தி
நிலத்தின் சக்தி
நீரின் சக்தி
நெருப்பின் சக்தி
காற்றின் சக்தி
ஆகாசத்தின் சக்தி (விண்மீன்களின் சக்தி)
காலி மனை வாங்கும்போது கவனிக்கவேண்டய முக்கியக்குறிப்புகள்

 

காலி மனையானது நான்கு செங்குத்தான (90°) மூலைகளைக் கொண்டதாக மட்டும் இருக்கவேண்டும். அதாவது காலி மனையானது சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ மட்டும் இருக்கவேண்டும்.
காலி மனையானது சரியான திசைகளை (திசைகாட்டும் கருவியில் 10º பாகைகளுக்கு மிகாமல்) கொண்டதாக இருக்கவேண்டும்.


காலி மனையானது கட்டாயமாக தவறான தெருக்குத்துகளினால் பாதிக்கப்பட்டு இருக்ககூடாது.
காலி மனையானது தெற்கிலும், மேற்கிலும் உயர்ந்த மலைகள், பழைய கோவில் கோபுரங்கள் கொண்டதாகவும், வடக்கிலும், கிழக்கிலும் ஆறு, குளம், ஏரிகள் கொண்டதாகவும் இருப்பது சிறப்பு. இதற்க்கு எதிர்மாறாக இருக்ககூடாது.
காலி மனையானது தெற்கிலும், மேற்கிலும் சற்று மேடாகவும் வடக்கிலும், கிழக்கிலும் சற்று பள்ளமாகவும் இருப்பது சிறப்பு.
காலி மனையானது கட்டாயமாக நல்ல சாலை வசதிகொண்டதாக இருக்கவேண்டும்.

காலி மனையை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். மரங்கள்,முட்செடிகள், கற்கள் ஆகியவைகளை வேருடன் நீக்கி சுத்தம் செய்யவேண்டும். மேலும் காலி மனையை தெற்கிலிருந்து வடக்காகவும் மற்றும் மேற்கிலிருந்து கிழக்காகவும் சரிவாக இருக்கும்படியும் அமைத்துக்கொள்ளுதல் சிறப்பைத்தரும்.

காலி மனையினை சுற்றி வேலிகள் அமைத்து, உச்சஸ்தானத்தில் நுழைவு வாயில்களை அமைத்துக்கொள்ளுதல் மிகவும் சிறப்பைத்தரும்.
வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டும்போது கவனிக்கவேண்டய முக்கியக்குறிப்புகள்

வீட்டினில் ஒரேயொரு படுக்கையறை மட்டும் அமைப்பதானால் அது கட்டாயமாக தென்மேற்குமூலையில்தான் இருக்கவேண்டும்.
வீட்டினில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட படுக்கையறைகளை அமைப்பதானால் முதலில் தென்மேற்குமூலை படுக்கையறை, இரண்டாவதாக தெற்கு மற்றும் மேற்கு மத்தியப்பகுதிகளில் படுக்கையறைகள், மூன்றாவதாக வடமேற்குமூலை படுக்கையறை, நான்காவதாக வடக்கு மத்தியப்பகுதி மற்றும் கிழக்கு மத்தியப்பகுதி படுக்கையறையென்று திட்டமிடுதல் வேண்டும். மற்றப்பகுதிகளில் படுக்கையறைகள் அமைப்பதை தவிர்த்துவிடுதல் நன்று.

கட்டப்படும் கட்டிடம் நான்கு செங்குத்தான (90°) வெளி மூலைகளைக் கொண்டதாக மட்டும் இருக்கவேண்டும். அதாவது கட்டப்படும் கட்டிடம் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ மட்டும் இருக்கவேண்டும்.
கட்டப்படும் கட்டிடத்திற்கு கிழக்கிலும், வடக்கிலும் கட்டாயமாக காலியிடம் விட்டுக்கட்டவேண்டும் அது மேற்கைவிடவும், தெற்கைவிடவும் அதிகமாயிருப்பது சிறப்பு.
கிழக்கிலும், வடக்கிலும் அதிகமான காலியிடம் விட்டுக்கட்டிடம் கட்டும்போது காலி மனையின் மத்தியபகுதியில் வீட்டின் வரவேற்பறையாக வருவதுபோன்று வரைபடம் தயார்செய்வது அவசியம். அதாவது காலி மனையின் பிரம்மஸ்தானத்தில் வீட்டின் வரவேற்பறையாக வருவதுபோன்று வரைபடம் தயார்செய்வது அவசியம்.
கட்டப்படும் கட்டிடத்திற்கு தலைவாசல் காலி மனைக்கு உச்சஸ்தானத்தில் வருவதுபோல் வரைபடம் தயார்செய்ய வேண்டும்.
கிழக்கிலும், வடக்கிலும் அதிகமான காலியிடம் விட்டுக்கட்டிடம் கட்டும்போது, கட்டிடம் காலி மனையின் அனைத்துப்பகுதி நடுக்கோட்டினையும் கட்டாயமாக ஆக்கிரமிக்கும்படியாக வரைபடம் தயார்செய்வது அவசியம், அவ்வாறு அமைக்காதபச்சத்தில் தலைவாசலை உச்சஸ்தானத்தில் அமைக்கமுடியாது.

கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணறுகள் வடகிழக்கு கிழக்கு அல்லது வடகிழக்கு வடக்கு உச்சப்பகுதிகளில் மட்டும்தான் தோண்டவேண்டும்.
கீழ்நிலைத் தண்ணீர்தொட்டி வடகிழக்கு கிழக்கு அல்லது வடகிழக்கு வடக்கு உச்சப்பகுதிகளில் மட்டும்தான் அமைக்கவேண்டும்.
மேல்நிலைத் தண்ணீர்தொட்டி கட்டிடத்தின்மேல் தென்மேற்கு பகுதியில் நீச்சபகுதிகளில் மட்டும்தான் அமைக்கவேண்டும்.
கழிவுநீர்த்தொட்டி(செப்டிக்டேங்க்) கட்டிடத்தின் வடமேற்கு வடக்கு பகுதிகளில் தாய் மற்றும் தந்தை சுவர்களை தொடாதவாறு அமைக்கவேண்டும். அவ்வாறு அமைக்கமுடியாதபச்சத்தில் வடக்கு மற்றும் கிழக்கு முன்பக்க மத்தியபகுதியில் அமைக்கலாம்.
கட்டப்படும் கட்டிடம் தென்மேற்கு பகுதிகளில் உயரமானதாகவும் வடகிழக்கு பகுதிகளில் உயரம் குறைவாக இருப்பதைப்போன்று திட்டமிடுதல் மிகுந்த சிறப்பைத்தரும்.
போர்டிகோ அமைப்பதாகயிருந்தால் அதன் அகலம் பத்து அடிக்குமிகாமல் கிழக்கு முன்பகுதி முழுவதுமாக அல்லது வடக்கு முன்பகுதி முழுவதுமாக அல்லது கிழக்கு மற்றும் வடக்கு முன்பகுதியில் முழுவதுமாக அமைக்கலாம். மற்ற பகுதிகளில்

போர்டிகோ அமைப்பதைத் தவிர்ப்பது நன்று. மேலும் எந்தத்திசையிலும் தாய் சுவர்களை துண்டிக்காது போர்டிகோ அமைக்கவேண்டும்.
கட்டிடத்தின் வெளிப்பக்க மாடிப்படிக்கட்டுகள் வடமேற்கு வடக்கு மற்றும் தென்கிழக்கு கிழக்கு பகுதிகளில் மட்டும்தான் அமைக்கவேண்டும். மேலும் அதன் கீழ்ப்பகுதிகளில் அடைப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அறைகளையும் அமைக்கக்கூடாது. தூண்களின் துணைகொண்டு மாடிப்படிக்கட்டுகள் அமைக்கலாம் அதனால் எந்தவொரு வாஸ்து குறைபாடும் ஏற்படாது.
கட்டிடத்தின் உள்பக்க மாடிப்படிக்கட்டுகள் தெற்கு தாய்சுவரின் மத்தியபகுதியிலும் மேற்கு தாய்சுவரின் மத்தியபகுதியிலும் மட்டும்தான் அமைக்கவேண்டும். எந்தவொரு உள்மூலைகளிலும் மாடிப்படிக்கட்டுகளை அமைக்கக்கூடாது. உள்பக்க மாடிப்படிக்கட்டுகளின் கீழ்ப்பகுதிகளில் பூஜையறை, படுக்கையறை மற்றும் சாப்பாட்டறை தவிர்த்து கழிவறை பொருள்கள் சேமிக்குமறைகள் அமைக்கலாம்.
மழைநீர் சேகரிக்கும் தொட்டியினை வடகிழக்கு கிழக்கு அல்லது வடகிழக்கு வடக்கு பகுதிகளில் அமைத்துக்கொள்ளுதல் சிறப்பைத்தரும்.

வாகனங்கள் நிறுத்தும் கொட்டகையை வீட்டின் வடமேற்கு வடக்கு மற்றும் தென்கிழக்கு கிழக்கு பகுதிகளில் தாய் மற்றும் தந்தை சுவர்களை தொடாதவாறு நீச்சபகுதிகளில் மட்டும்தான் அமைக்கவேண்டும். ஆனால் அதற்காக அமைக்கப்படும் வாயிலானது உச்சப்பகுதிகளில் மட்டும்தான் அமைக்கவேண்டும்.
வீட்டிற்கான மின் இணைப்பு பெட்டிகள் வீட்டின் வடமேற்கு வடக்கு மற்றும் தென்கிழக்கு கிழக்கு பகுதிகளில் அமைக்கவேண்டும் மற்றப்பகுதிகளில் மின் இணைப்பு பெட்டிகள் அமைப்பதை தவிர்த்துவிடுதல் நன்று.
தெற்கிலும், மேற்கிலும் கட்டப்படும் மதில்சுவர்கள் உயரமாகவும் தடிமானதாகவும் இருப்பது சிறப்பைத்தரும். வடக்கிலும், கிழக்கிலும் கட்டப்படும் மதில்சுவர்கள் உயரம்குறைவாக இருக்கும்படி மதில்சுவர்களை கட்டவேண்டும்.
கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ஜன்னல்கள் கட்டாயமாக இருக்கவேண்டும். மேலும் அவைகள் உச்சஸ்தானத்தில் இருக்கவேண்டும். மற்றும் எண்ணிக்கையில் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளின் ஜன்னல்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகஇருக்கவேண்டும்.
விருந்தினர் அறைகள் மற்றும் கழிவறைகளை கட்டிடத்தின் வெளிப்பகுதிகளில் அமைப்பதாக இருந்தால் வடமேற்கு வடக்கு பகுதிகளில் தாய் மற்றும் தந்தை சுவர்களை தொடாதவாறு அமைக்கவேண்டும்.

சமையலறையை கட்டிடத்தின் வெளிப்பகுதிகளில் அமைப்பதாக இருந்தால் தென்கிழக்கு கிழக்கு பகுதிகளில் தாய் மற்றும் தந்தை சுவர்களை தொடாதவாறு அமைக்கவேண்டும்.

வாஸ்து பகவான் கதை-1

ஆதிகாலத்தில் வரங்கள் பலபெற்ற அண்டகாசூரன் என்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் தேவர்களையும், முனிவர்களையும் அவர்களது பணிகளை செய்யவிடாது மிகுந்த தொல்லைகளையும், துன்பங்களையும் கொடுத்துவந்தான். ஒரு கட்டத்தில் அண்டகாசூரன் தான் பெற்றபல வரங்களினால் ஆணவம் கொண்டு எம்பெருமான் சிவனை தன்னுடன் போரிடவருமாறு அழைப்புவிடுத்தான். சிவபெருமானும் அண்டகாசூரனின் அழிவுகாலம் நெருங்கிவிட்டதை எண்ணி அவனது அழைப்பை ஏற்று அவனுடன் போரிட்டு அவனை வென்றுகிடத்தினார். சிவபெருமான் ஆண்டகாசூரனிடம் போரிடும்வேளையில் எம்பெருமான் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வைத்துளியானது பூமியின்மீதுபட்டவுடன் பூமியை பிளந்துகொண்டு அதிலிருந்து பூதம் ஓன்று ஜனனம் செய்தது. அந்த பூதமானது தோற்றத்தில் பூமிக்கும் வான்மண்டலத்திற்கும் தொடர்பை ஏற்படுத்தும்வகையில் மிகவும் பிரம்மாண்டமாகயிருந்தது. அந்த பூதமானது தனது அகோரப்பசியின் காரணமாக கண்ணில் தென்பட்ட அசுரசேனைகளையெல்லாம் விழுங்கியது. அண்டகாசூரன் மாண்டபிறகு அவனது உடலையும் விழுங்கியது. அதன்பிறகும் பூதத்தின் பசி அடங்கவில்லை எனவே பூதமானது எம்பெருமான் சிவனிடம் தனது பசியினை போக்கி அருள்புரியுமாறு வேண்டிக்கேட்டுக்கொண்டது. சிவபெருமானும் பூதத்தின் வேண்டுதலின்படி அது விரும்பியதையெல்லாம் உண்ணக்கூடிய வரத்தினை அளித்துச்சென்றார். பூதம்பெற்ற வரத்தின் காரணமாக அது மூவுலகத்தினையும் அழிக்கும் சக்திபெற்றுயிருப்பதை உணர்ந்த தேவர்கள் பிரம்மதேவரிடம் முறையிட்டனர். அதன்பின் பிரம்மதேவரின் அறிவுரைப்படி தேவர்கள் அந்த பூதத்தை பூமியினுள் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். இவ்வாறு செய்யும்போது எந்தெந்தத் தேவர்கள் அப் பூதத்தின் எப்பகுதியைப் பிடித்துக் கொண்டார்களோ அவர்களே உடலின் அப்பகுதிக்கு அதிபதிகளாகக் கருதப்படுகிறார்கள். தேவர்களின் இந்த செயலினாலும் தனது அகோரப்பசியினாலும் வேதனையடைந்த பூதமானது பிரம்மதேவரிடம் தன்னை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்குமாறு வேண்டியது. பிரம்மதேவன் பூதத்திடம் நீ மக்களால் வாஸ்து பகவான் என்று அழைக்கப்படுவாய் என்றும் பூமியினுள் படுத்திருந்து உன் கடமைகளை செய்யவேண்டும் என்றும் வருடத்தில் வெவ்வேறு மாதங்களில் குறிப்பிட்ட எட்டு நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் விழித்திருந்து, மக்கள் புதிதாக வீடு கட்டும்போது உன்னை பூஜித்து அவர்கள் அளிக்கும் பூஜை பிரசாத உணவுகளை உண்டு உன் பசியினை போக்கிக்கொண்டு அவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கி நல்லாசி வழங்கும்படி வரம் அளித்ததாக புராணக்கதைகளில் கூறப்பட்டுள்ளது. மேலும் வாஸ்து பகவானின் தொப்புள் ஸ்தானத்தில் வேதகால முழுமுதற் கடவுளான பிரம்மதேவனும் மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் 45 தேவர்கள் அதிபதியாக இருந்து வாஸ்து பகவானை வழிநடுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வாஸ்து பகவான் கதை-2

ஆதிகாலத்தில் வரங்கள் பலபெற்ற அண்டகாசூரன் என்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் தேவர்களையும் முனிவர்களையும் அவர்களது பணிகளை செய்யவிடாது மிகுந்த தொல்லைகளையும் துன்பங்களையும் கொடுத்துவந்தான். ஒரு கட்டத்தில் அண்டகாசூரன் பெற்றபல வரங்களினால் மூவுலகத்தினையும் அழிக்கும் சக்திபெற்றுயிருப்பதை உணர்ந்த தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காத்தருளுமாறு கேட்டுக்கொண்டதனால் சிவபெருமானும் அண்டகாசூரனின் அழிவுகாலம் நெருங்கிவிட்டதை எண்ணி அவனுடன் போரிட்டு அவனை வென்றுகிடத்தினார். சிவபெருமான் ஆண்டகாசூரனிடம் போரிடும்வேளையில் எம்பெருமான் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வைத்துளியானது பூமியின்மீதுபட்டவுடன் பூமியை பிளந்துகொண்டு அதிலிருந்து பூதம் ஓன்று ஜனனம்செய்தது. அந்த பூதமானது தோற்றத்தில் பூமிக்கும் வான்மண்டலத்திற்கும் தொடர்பை ஏற்படுத்தும்வகையில் மிகவும் பிரம்மாண்டமாகயிருந்தது. அந்த பூதமானது எம்பெருமான் சிவனின் கட்டளைக்காக காத்திருந்தது. சிவபெருமான் ஆண்டகாசூரனையும் அவனது சேனையையும் வீழ்த்தியபின் அந்த பூதத்தை நோக்கி பூமியெங்கும் இறந்து கிடக்கும் அசுரர்களின் உடல்களை அப்புறப்படுத்தி பூமியினை சுத்தம் செயும்படி கட்டளையிட பூதமானது தனக்கிட்ட கட்டளையை செவ்வனே செய்து முடித்தது. பணியினை செய்து முடித்த பூதமானது மீண்டும் சிவபெருமானிடம் சென்று அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க சிவபெருமான் பூதத்திடம் நீ மக்களால் வாஸ்து பகவானாக என்று அழைக்கப்படுவாய் என்றும் மேலும் பூமியினுள் இருந்து வான்மண்டல ஆக்க சக்தியினை பெற்று பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ நீ அயராது உழைப்பாயாக என்றும் வரம் வழங்கிச்சென்றதாகவும் மேலும் வேதகால முழுமுதற் கடவுளான பிரம்மதேவனும் மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் 45 தேவர்கள் அதிபதியாக இருந்து வாஸ்து பகவானை வழிநடுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. வாஸ்து பகவான் சரியாக உத்ராயணகாலத்தில் (கோடைகாலத்தில்) பூமியின் மையத்தில் வடகிழக்கில் தலையையும், தென்மேற்கில் காலையும் வைத்துக்கொண்டு தனது வலது கையினை வாயு மூலையிலும், இடது கையினை அக்னி மூலையிலும் இருக்குமாறு வைத்துக்கொண்டு படுத்திருந்து தனது பணிகளை செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒவ்வொரு மாதத்திலும் வெவ்வேறு திசைகளில் தலையை வைத்துக்கொண்டு படுத்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வாஸ்து பகவான் வருடத்தில் வெவ்வேறு மாதங்களில் குறிப்பிட்ட எட்டு நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் எம்பெருமான் சிவனை பூஜைசெய்து வழிபாடு செய்வதாகவும், அவ்வாறு அவர் பூஜையை செய்து முடிக்கும் வேளையில் புதிதாக கட்டிடங்கள் (வீடு) கட்டும் மக்கள் வாஸ்து பகவானை நோக்கி பூஜைகள் செய்து அவரை வழிபடும்போது அவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கி நல்லாசி வழங்குவதாக புராணக்கதைகளில் கூறப்பட்டுள்ளது.

புதிய வீடு கட்டுவதற்கான வாஸ்துப்படியான வரைபடங்கள் வரைந்துதரப்படும்.
புதிய வீட்டுமனைகள் வாங்கும்போது தேவையான வாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
புதிய வீடுகளை வாங்கும்போது தேவையான வாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
பழைய வீடுகளை வாங்கும்போது தேவையான வாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
பழைய வீடுகளை வாஸ்துபடி மாற்றியமைக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
வீட்டினை வாஸ்துபடி பாகபிரிவினை செய்யும்போது தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
காலி மனைகளை வாஸ்துபடி பாகபிரிவினை செய்யும்போது தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
புதிய மற்றும் பழைய அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து ஆலோசனை கிடையாது.

புதிய வீடு கட்டுவதற்கான வாஸ்துப்படியான வரைபடங்கள் வரைந்துதரப்படும்.
புதிய வீட்டுமனைகள் வாங்கும்போது தேவையான வாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
புதிய வீடுகளை வாங்கும்போது தேவையான வாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
பழைய வீடுகளை வாங்கும்போது தேவையான வாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
பழைய வீடுகளை வாஸ்துபடி மாற்றியமைக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
வீட்டினை வாஸ்துபடி பாகபிரிவினை செய்யும்போது தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
காலி மனைகளை வாஸ்துபடி பாகபிரிவினை செய்யும்போது தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
புதிய மற்றும் பழைய அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து ஆலோசனை கிடையாது.

முகப்பு ஆலோசகர் பற்றிஎங்கள் சேவைகள் தொடர்புக்கு
Copyright 2024 – Vasthu Guru
Kalaimamani K.l.Gokulakrishna  
+91 9543556413

Translate »