தர்மம் செய்தால் கர்மாவை குறைக்கலாம்

பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம்
இறந்தோம் என்பதை விட இறந்த பிறகும் ஆன்மா வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்
செல்வம் கிடைப்பது புண்ணியத்தால் தான் உழைப்பால் கிடைப்பதாகஇருந்தால் ஏன் உழைப்பாளிகளுக்கு கிடைப்பதில்லை புத்தி கூர்மையினால் கிடைப்பதாக இருந்தால் ஏன் பண்டிதருக்கு கிடைப்பதில்லை வாழ்க்கையில் செல்வங்களும் வெற்றியும் நல்ல கணவனும் நல்ல மனைவியும் நல்ல குழந்தைகளும் புண்ணிய பலத்தினால் தான் கிடைக்கிறது.
நீங்கள் இம்மையிலும் மறுமையிலும் சுகமாக இருக்க விரும்பினால் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு புண்ணிய செயல்களாவது செய்யுங்கள் ஏனெனில் வாழ்க்கையில் சுகமும் செல்வம் வெற்றியும் புண்ணியத்தால் தான் கிடைக்கிறது.

கல்வி என்பது மட்டும் தான் ஒருவன் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது இல்லை முயற்சியும் விழிப்புணர்வும் இருந்தால் முன்னேற முடியும். சில பேர் கையெழுத்து கூட போடத் தெரியாது ஆனால் கோடீஸ்வரனாக இருப்பதை பார்க்க முடியும். ஆகவே செல்வம் புகழ் நல்லதொரு வாழ்க்கை அனைத்தும் புண்ணிய பலன்களினால் கிடைக்கிறது.

நாம் போன பிறகு பிறர் நலனுக்காக ஆயுள் இன்சூரன்ஸ் செய்து கொள்வதை விட உடம்பு இருக்கும் போதே நற்கதி பெற வேண்டியதற்கானதர்ம காரியங்களை செய்வதே முக்கியமானது என்று ஞானத்திரு உருவாய் கருணை கடலை வாழ்ந்து காட்டிய ஸ்ரீ காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறார்.
வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை பாவ புண்ணியம்.
தெய்வம் மானுஷ ரூபா
தெய்வம் மனித வடிவில் உள்ளது
ஆன்மா எல்லா உயிர்களிலும் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவான விஷயம்

எவ் உயிரையும் தம்முயிர் போல் எண்ணுதல் வேண்டும் என்று ராமலிங்க அடிகளார் கூறியுள்ளார்.
பயிர்கள் வாடிய போது அதனை கண்ட வள்ளலார்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்
என்று வருத்தப்பட்டு உண்மை நிலையினை அறிந்து பாடினார்
எத்தனையோ பேர் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும்
தானம் என்பது என்ன? தர்மம் என்பது என்ன?
கேட்டு செய்வது தர்மம் தானாக முன்வந்து செய்வது தானம் கேட்பது என்பது என்ன பசியின் குரல் தானே அதனால் முன்வந்து தர்மத்தை செய்யுங்கள்.
மனித குல சேவையை மகேசன் சேவையாக கருதப்படுகிறது
நீங்கள் செய்த தர்மம் தலைகாக்கும்.

தாங்கள் விரும்பும் திட்டத்திற்கு நன்கொடை அளிக்கலாம்.

அன்னதானம்
வஸ்திரதானம்
கோதானம்
பசுமை பாரதம்
தூய்மை பாரதம்
பொதுச் சேவை
தியான மண்டபம்
கல்விச் சேவை
நீர் மோர் பந்தல்
அன்னதானம்.
அறம் செய்ய விரும்பு !!!

முகம் தெரியாதவர்க்கும் முகமலர்ச்சியோடு தருவது உண்மையான அறம் ஆகும்.
இதயம் உள்ள மனிதன் எவனும் சக உயிர்களின் வருத்தம் கண்டு அவர்களுக்கு உதவ எப்போதும் காத்திருப்பான்.
அன்னதானம், கல்வி தானம், ஸ்வர்ணதானம், ஆடை தானம்,
என தானங்கள் பலவகையாக இருந்தாலும் அடிப்படையாக வலியுறுத்தப்படுபவை உணவு,உடை, உறைவிடம், ஆகிய மூன்று மட்டுமே.
பூமியில் பிறந்து வாழ மனிதர்கள் ஒவ்வொருவரும் பசி இல்லாத உணவையும் உடம்பை மறைக்கும் ஆடையையும் பாதுகாப்போடும் தங்கி வாழ வீட்டையும் பெறுவதற்கு உரிமை உடையவர்கள்.
பசித்திருக்கும் மனிதனுக்கு உணவு கொடுப்பவர்களை உயிரையே தந்தவர்களாக உயிர்ப்பித்துச் சொல்கிறது நமது பழந்தமிழ் இலக்கியம் – உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! – குடபுல வியனார்

பகவானும் கீதையில் எவன் தனக்காக மட்டும் ஆஹாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும் முழுக்க அவனேதான் அநுபவித்தாக வேண்டும்; வேறு யாரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறார்
அன்னதானம் இந்து தர்மத்தில் உள்ள அனைத்து தானங்களின் சர்வ சிரேஷ்டமாகக் கருதப்படுகிறது மற்றும் மஹாதான் என்று அழைக்கப்படுகிறது . அன்னதானம் புண்ணியத்தை ஈட்டுவதாகவும், பல பிறவிகளின் பாவங்களை அழிக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்கள் உட்பட அனைத்து இந்து கிரந்தங்களும் அன்னதானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. புராணங்கள் நமது வயிற்றை அக்னி குண்டத்துடன் ஒப்பிடுகின்றன, அங்கு நமது உடலை உருவாக்கும் ஐந்து உறுப்புகளில் ஒன்றான அக்னி உள்ளது. இந்த வயிற்று தீக்கு தொடர்ந்து உணவு தேவைப்படுகிறது.
எனவே அறம் என்பதை ஒழுகாது நிலையில் பார்க்கும் போது பொன் பொருள் செல்வம் என வைத்திருப்பவர்கள் ஏதுமற்ற ஏழைகளுக்கு தேவையானவற்றை தேவையானபோது பகிர்ந்து கொடுக்க வேண்டும் இதுவே வாழ்வியல் அறமாகும்.
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் – மகாகவி பாரதி
வஸ்திரதானம்.

துவாரகாவில் இருந்தாலும் அஸ்தினாபுரத்தில் இருந்தாலும் பரிதவித்த பாஞ்சாலிக்கு ஆடை வழங்கி வஸ்திரதானத்தின் அவசியத்தை தெளிவுபடுத்தினான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை போர்த்தி அழியா புகழ் பெற்றான் தமிழ் மன்னன் போகன்
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்’- என்ற அவ்வையின் வாக்கின்படி உணவு உடை உறைவிடம் ஆகியவை மனிதன் அடிப்படை தேவை ஆகும்.
அவசியப்படுபவர்களுக்கு, திக்கற்றவர்களுக்கு, கைவிடப்பட்டவர்களுக்கு ஆடைகள் வழங்குதல் என்பது மிகச் சிறந்த செயலாகும். நமது ஆத்மாவிலும் வாழ்விலும் கரையாக சுமையாக படிந்துள்ள தோஷங்களை போக்க வல்லது.
கார்த்திகை பூர்ணிமா போன்ற விசேஷ நாட்களில் வஸ்தர் தானம் செய்வது மிகவும் பலன் தரும். இது கடந்த கால பாவங்களை சுத்தப்படுத்தவும் ஆன்மீக வெகுமதிகளை பெறவும் கிருஷ்ணரை மகிழ்ச்சிய டையச் செய்யவும் உதவுகிறது.
இது நல்ல அதிர்ஷ்டத்தை தருவதாகவும் கருதப்படுகிறது தேவைப்படுபவர்களுக்கு ஆடைகள் கொடுப்பது வறுமை மற்றும் துன்பத்திலிருந்து விடுபட உதவும் என்று இந்து நூல்கள் கூறுகின்றன.

வஸ்திரம் ஆன்மாவோடு தொடர்புடையது. தர்மசாஸ்திரங்கள் நாம் அணிந்த வஸ்திரம் நமக்கு சாத்வீக எண்ணங்களை தோற்றுவிப்பதாகவும் தெய்வீக ஆற்றலை கிரகித்துக் கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்க வேண்டும் என்று கூறியது.
தேவையான தருணத்தில் எளியவருக்கு செய்யப்படும் வஸ்திரதானம் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்தன மலையின் கீழ் மக்களை காத்து ரட்சிப்பதற்கு ஒப்பாகும்.
இளையவர்களுக்கு வஸ்திர தானம் செய்வது மூர்த்திகளுக்கு வஸ்திரம் சமர்ப்பிப்பதற்கு ஒப்பாகும். யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும் பசியால் வாடியவர்களுக்கு உணவும் ஆடை இல்லாதவர்களுக்கு ஆடையும் திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக இவ்வாறு செய்தால்.
– ஸ்ரீ ஹரி சந்தோஷம் அடைவார்.
பசு தானம்
கோதானம் கோடி புண்ணியம்..., பசு தானம் பாவ விமோசனம்.....

தானத்தில் சிறந்தது… மனிதனுக்கு நிதானம் என்ற சொல் வழக்கை அடிக்கடி குறிப்பிடுவார்கள். வாஸ்திர தானம், கோதானம், பூமி தானம், அன்னதானம் ஆகியவை விரைவில் பலன் தருபவை என்கின்றன தர்ம சாஸ்திரங்கள்.
மனிதன் முக்கியமாக மத்திய காலத்தில் கஷ்டப்படுவது கடன்களை வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாது இருப்பதால் தான். நமக்கு வரும் கஷ்டங்கள் முக்கால்வாசி முன் ஜென்ம வினையிலிருந்து தான் வருகிறது அதனை தீர்க்க வேண்டும் அதேபோல் இந்த ஜென்மத்திலும் அறிந்து மற்றும் அறியாத செய்த பாவத்தில் இருந்து விடுவித்து நல்ல நிலையை அடைய வேண்டும்..
தானம் அளிப்பது தான் சிறந்த வழி தானங்களில் பலவகை தானங்கள் இருக்கின்றன இப்படி பல வகை தானங்கள் இருந்தாலும் கோ தானத்திற்கு ஈடு இணையாக வேறு எந்த தானமும் இருக்க முடியாது.
கோதனம் செய்யும் போது நமது முன்னோர்கள் ஆசி நமக்கு கிடைக்கிறது ஜோதிடத்தில் எப்பேர்ப்பட்ட தோஷமும் இதனால் விலகும்.
கோதானம் என்பது ஒரு குறிப்பிட்ட சுப காரியம் வெற்றிகரமாக முடியும். தமது வம்சம் சிறந்து விளங்கவும் கோதானம் செய்யலாம்.

ரிஷிக்கடன், தேவகடன் பித்ருக்கடன், மானுஷ கடன் என்று நான்கு கடன்களில் தேவ கடனை வழிபாடுகள் செய்து தீர்த்துக் கொள்கிறான். ரிஷிக்கடனை முன்பிருந்த ஆத்ம யோக சாதுக்களின் பீடங்களின் தரிசனத்தால் தீர்த்துக் கொள்ள முடிகிறது.
பித்ரு கடனை புண்ணிய தீர்த்தங் களுக்குச் சென்று எள்ளும் தண்ணீரும் இறைத்துத் தீர்த்துக் கொள்ள முடியும். மானுஷ கடனைத் தீர்க்க முடியாமல் துன்பப்படும் போது சில கடன் தீர்க்கும் பூஜைகளைச் செய்கிறோம்.
கோதானம் செய்கின்ற வீட்டிலும், கோபூஜை செய்யும் வீட்டிலும் இப்படிப்பட்ட கடன்கள் தங்காமல் விலகிப் போய்விடும். நமது நாட்டில் கோ எனும் பசு மாட்டை தாயாகவும் கடவுளாகவும் வணங்குகிறோம்.
பசுவானது தன்னுடைய கன்றுக்கும் பால் கொடுத்து உலகுக்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும் இந்திரன் முதலான தேவதைகள் இருப்பதால் கடவுளாகவும் வணங்குகிறோம். பழைய காலத்தில் “பெண்ணாகப் பிறந்தால் பசுவாகப் பிறக்க வேண்டும்” என்பார்கள்.
பசு பால் சுரக்கும் வரையாவது ஒருவரின் வாழ்க்கையில் பூஜை புனஸ்கார மரியாதைகளுடன் வாழ்க்கையை கழிக்கலாம். ஆகவே கோபூஜை, கோதானம், கோசேவை முதலானவை நமது நாட்டின் பண்பாடாகவே அமைகிறது. எனவே பசுவை பூஜிப்பதும் தானம் செய்வதும் அஷ்டலட்சுமி கடாட்சத்திற்கும் எல்லா பாவங்களையும் போக்குவதற்கும் மிகச்சிறந்த பிராயச்சித்தமாக தர்மசாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
பசுமை பாரதம்

பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். ஆனால்…

பூமி ஓசோன் படிவத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நம் குழந்தைகளும், அவர்களுக்கு அடுத்த சந்ததியினரும் நன்றாக வாழ நல்ல தூய்மையான பூமியை விட்டுச்செல்ல வேண்டாமா ?! அதற்கு இதுவரை செய்தவை போதாது இன்னும் அதிகமாக, இன்னும் உற்சாகமாக முழு முன்னெடுப்புடன் திட்டமிட்டு செயல் படுத்தபட வேண்டும்…!
இதை குறித்து எனக்குள் ஒரு பெரிய கனவு இருக்கிறது…எந்த ஒரு கனவும் பிறருக்கு பயன் தரக்கூடியதாக இருந்தால் அதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்…?! என் கனவும் அது போன்ற ஒரு கனவுதான்…! கனவை நனவாக்க ஒரே அலைவரிசை கொண்ட உள்ளங்கள் இணைந்தது தற்செயல் …!
இதோ இன்று இணையத்தின் மூலம் எங்கள் கரங்களை கோர்த்து இருக்கிறோம்…! இனி இந்த பசுமை விடியல் எனது மட்டுமல்ல…நமது !! ஒருநாள் நம் தேசம் பசுமையில் கண் விழிக்கும்…இது வெறும் ஆசை அல்ல…திடமான நம்பிக்கை !! குருஜி ஸ்ரீ மஹாதேவ்.
தூய்மை பாரதம்

“கடவுளுக்கு அடுத்தபடியாக தூய்மை” என்பது ‘நமது தேசத்தின் தந்தை’ மகாத்மா காந்தி சொன்ன வார்த்தைகள். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தூய்மை மிகவும் முக்கியமானது. நல்ல சுகாதாரம் மற்றும் தூய்மையை பராமரிக்கும் நபர்களிடையே நம்பிக்கையுடன் சிந்திக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்று ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. நேர்மறையான சிந்தனையின் ஆதரவுடன், தனிநபர்கள் திருப்தியான வாழ்க்கை முறையை வழிநடத்த முடியும்.
சுத்தமும் சுகாதாரமும் நமது சொந்த நலனுக்காக மட்டும் அல்ல. நம்மையும், நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக்குவதன் மூலம், நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கிறோம்.
சுகாதாரம் மற்றும் தூய்மை இல்லாததால் பல கொடிய நோய்கள் மக்களிடையே பரவ வாய்ப்புள்ளது. தனிநபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உலகெங்கிலும் உள்ள பல சுகாதார கிளப்புகள், நிறுவனங்கள் மற்றும் குழுக்கள் தூய்மையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு புரிய வைக்க சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
தூய்மை இந்தியா பிரச்சாரம் இந்தியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய சமூக திட்டங்களில் ஒன்றாகும், இந்த நிகழ்வில் 3 முதல் 4 மில்லியன் குடிமக்கள் பங்கேற்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய சுகாதாரத்தை ஊக்குவிக்கும் இந்த நாடு தழுவிய பிரச்சாரத்தின் முழக்கம் “சுத்தத்தை நோக்கி ஒரு படி” என்பதாகும். ஆரோக்கியமான, பசுமையான வாழ்க்கையை வாழ்வதற்கு முன்வைக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, சிறந்த இந்தியாவுக்கான நமது படிகளைக் குறிப்போம்.
கல்வி தானம்.

நம்மால் இயன்ற அளவு கல்வி கற்க வேண்டிய உதவிகளை செய்வோம் அது பணமாகவோ பொருளாகவோ அல்லது கல்வி தானம் வழங்கும் அறக்கட்டளையோடு இணைந்து செய்யும் சேவையாக கூட இருக்கலாம் எந்த வகையாக இருப்பினும் கல்வி தானம் அழகாய் பிறர் வாழ்வை ஒளி வீசுவே செய்யும் கல்வி தானம் நம்மை மேம்படுத்தும் நம் சமுதாயத்தை மேம்படுத்தும்.
நீங்கள் செய்யும் கல்விதானம் காலத்திற்கும் அழியாதது. நாம் பிறந்ததிலிருந்து துளியாவது உலக நன்மைக்காக அமைவது குறித்து மகிழ்ச்சி கொள்வோம் இன்றே செய்வீர் கல்வி தானம் கல்வி தானம் என்பது வெறும் எழுதுவதும் படிப்பதும் அல்ல ஒருவரின் அறிவு பெருகவும் அவரது வாழ்க்கை உயரம் அடிப்படையானது கல்விதான் கல்வி அறிவு பெற்ற ஒருவரால் பிறரைச் சான்றாது கௌரவத்துடன் வாழ முடியும்.

கல்வி ஒன்றே என்றும் குறையாத மரியாதையினும் மதிப்பணியும் சமுதாயத்தில் பெற்று தருகிறது இதைத்தான் நம் முன்னோர் “கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்றனர்.
குழந்தைகளுக்கும் இளைய சமுதாயத்திற்கும் பெண்களுக்கும் கல்வி ஒன்றே அவர்கள் வாழ்க்கையும் வருங்காலமும் ஆகும்.சிறு வயதில் கல்வி அக்குழந்தைகளின் வாழ்வின் அடிப்படை ஆகும்.
ஒரு பெண் படித்தால் குடும்பமே படிப்பதற்கு சமம் என்பது மிக உண்மை. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு அடிப்படைத் தேவையான புத்தகம் ,உடை ,வாட்டர் பாட்டில், பள்ளி கட்டணம் என எந்த விதத்திலாவது உதவிட வேண்டும் என்று நினைத்தால் …….